1.12.09

சுட்டெரிக்கும் நரகின் அழைப்பாளிகள் இவர்கள்.

தங்களது ஷிர்க்கான கொள்கைகளுக்கிடையே குர்ஆன், ஹதீஸ் அரபி வசனங்களை செருகி மெளலூது, ராதீபு, யாகுத்பாவென அரபியில் தானும் ஓதி, மற்றவர்களையும் ஓத வைத்து, தஸவ்ஃப் என்ற பெயரில் ஹகீகத், மஃரிபத், தரீகத், ஷரீஅத்தென அரபி சொற்களால் மக்களை ஏய்த்து நரகத்திற்கு அழைப்பு விடுபவர்கள்.





ஹூதைஃபத்துல் யமான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் (எப்போதும்) நல்லதைப் பற்றியே கேட்பவர்களாக இருந்தனர். நானோ கெட்டது என்னை மிகைத்து விடாமல் இருக்க கெட்டது பற்றியே கேட்கக் கூடியவனாக இருந்தேன். ஒருமுறை:

நான் : அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமையிலும் தீமையிலும் (மூழ்கி) இருந்தபோது, அல்லாஹ் எங்களுக்கு (இஸ்லாம் என்ற) இந்த நல்லதை அருளினான். இந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!!

நான் : அந்த கெட்டதற்குப் பின்னர் நல்லது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! ஆனால் அது தகனுன் - களங்கப்பட்டிருக்கும்.

நான் : அதனது தகனுன் - களங்கம் என்ன?

நபி (ஸல்) : ஒரு கூட்டம் எனது நேர்வழி அல்லாததைக் கொண்டு மக்களை வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களை (அச் செயல்களைக்) கண்டறிந்து (அவற்றை) நிராகரித்து விடுவீர்கள்.

நான் : அந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! (சிலரால்) நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுக்கப்படும். எவர்கள் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்.

நான் : யாரஸூலல்லாஹ்! அவர்களைப் பற்றி (எனக்கு) விளக்குவீர்களாக.

நபி (ஸல்) : அவர்கள் நம்மைச் சார்ந்தவர்களாகவும் நாம் பேசுவதையே பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

நான் : (அவர்கள் வலையில் சிக்காமல் இருக்க) அப்போது (எப்படி நடக்கவேண்டு மென்று) எனக்கும், (என்னைப் போன்றவர்களுக்கும்) என்ன கட்டளை இடுகிறீர்கள்?

நபி (ஸல்) : (அப்போதும்) நீர் ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஐயும் அதன் இமாம் ஐயும் பற்றிக் கொள்வீராக.

நான் : (நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற) என்ற அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால்…..?

நபி (ஸல்) : (மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற) எல்லாப் பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக. அப்படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே!.

புகாரி : மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம் : இமாரா 3/4553, 4554
திர்மிதி : ஃபிதன் 57, இப்னுமாஜ்ஜா : ஃபிதன் 2/3979, தயாலிஸி : 1/443

No comments: