கணவாயைக் கடக்காதோருக்கு எப்பக்கமும் மூடப்பட்ட நெருப்பு
| بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ | 
| لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (90:1) | 
| وَأَنتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், (90:2) | 
| وَوَالِدٍ وَمَا وَلَدَ பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, (90:3) | 
| لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். (90:4) | 
| أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ 'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா? (90:5) | 
| يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا "ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான். (90:6) | 
| أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? (90:7) | 
| أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா? (90:8) | 
| وَلِسَانًا وَشَفَتَيْنِ மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (90:9) | 
| وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். (90:10) | 
| فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. (90:11) | 
| وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். (90:12) | 
| فَكُّ رَقَبَةٍ (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- (90:13) | 
| أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். (90:14) | 
| يَتِيمًا ذَا مَقْرَبَةٍ உறவினனான ஓர் அநாதைக்கோ, (90:15) | 
| أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). (90:16) | 
| ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். (90:17) | 
| أُوْلَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். (90:18) | 
| وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர். (90:19) | 
| عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது. (90:20) | 
 
No comments:
Post a Comment